29/10/2024

அனைவரையும் உள்ளடக்கும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பை நோக்கிய எங்கள் முதல் முயற்சி: Accel Atoms வலைத்தளத்தில் பலமொழிகள் இடம்பெறுகின்றன

Team Accel Atoms

121+ மொழிகள்

19,500+ கிளைமொழிகள்

140,00,00,000+ மக்கள்

இந்தியா அதன் மக்கள் தொகையால் மட்டுமல்லாமல் அதன் பல மொழிகள் மற்றும் கிளைமொழிகளாலும் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது. 

கடந்த மூன்று ஆண்டுகளாகவே நாங்கள் இந்தியா முழுவதும் இருக்கும் பல ஆயிரக்கணக்கான நிறுவனர்களுடன் பேசிக்கொண்டும் பல துறைகளிலும் இடங்களிலும் கட்டுமானத்தைத் தொடர்ந்துகொண்டும் இருந்து வருகிறோம்.

நாங்கள் ஓர் அடிப்படை உண்மையைக் கற்றுக்கொண்டோம் - நிறுவனர்கள் ஒரு சட்டகத்துக்குள் (framework) அடங்குவதில்லை. மேலும் இரு நிறுவனர்கள் ஒன்றுபோல் இருக்க மாட்டார்கள். முக்கியமாகத் தொழில்முனைவு ஒரு குறிப்பிட்ட மொழி அல்லது கிளைமொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற தடைகள் இல்லாமல் தேசம் முழுவதும் செழித்தோங்குகிறது.

ஸ்பின்னியின் (Spinny) நிறுவனரான நீரஜ் சிங் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். அவர் ஜார்கண்டின் டால்ட்டன்கஞ்சில் வளர்ந்தவர். ஓர் இந்திவழி பள்ளிக்கூடத்தில் பயின்றவர். அவர் தன் வாழ்க்கையில் பிற்காலத்தில்தான் ஆங்கிலத்தைக் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். நீரஜுக்கு ஒருபோதும் மொழி ஒரு தடையாகவோ தடங்கலாகவோ இருந்ததில்லை.

இன்று பழைய கார் மார்க்கெட்டில் ஸ்பின்னி முன்ன்ணியில் உள்ளது. இந்தியா முழுவதிலும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

மொழித் தடைகளைக் கடந்து பெரிதாக ஒன்றைக் கட்டிவரும் பல நிறுவனர்களை உதாரணங்களாகக் காட்ட முடியும். அப்படியானால் நம்முன் நிற்கும் கேள்வி இதுதான், “மொழிகளைக் கடந்து சிறந்த நிறுவனர்களுக்கும் அவர்களுடைய கருத்துகளுக்கும் உதவும் வகையில் நம்மால் எப்படி ஓர் அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழலை உருவாக்க முடியும்?”

அடித்தளத்திலேயே அனைவரையும் உள்ளடக்குவது என்பது தொடங்கிவிடுகிறது. இந்தியாவில் இருக்கும் எவரும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் ஒரு வலைத்தளத்தை உருவாக்குவதுதான் முதல் படியாகும்.

இன்று ஆங்கிலம் தவிர பீட்டாவில் நாங்கள் ஐந்து புதிய இந்திய மொழிகளில் Accel Atoms வலைத்தளத்தை அறிமுகப்படுத்துகிறோம்:

  • கன்னடம்
  • மராத்தி
  • இந்தி
  • தமிழ்
  • தெலுங்கு

Accel Atoms எப்போதும் நிரந்தர பீட்டாவில் இருக்கிறது. இந்தியாவில் இருக்கும் அனைத்து நிறுவனர்களுக்கும் ஓர் அனைவரையும் உள்ளடக்கிய சுற்றுச்சூழலை உருவாக்குவதை நோக்கி எடுத்துவைக்கும் ஒரு தொடர் நடவடிக்கைகளில் எங்கள் பன்மொழி அம்சம் முதலாவதானதாகும். தனக்கு பயனுள்ளதாக நினைக்கும் ஒரு நிறுவனருடன் இதை நீங்கள் பகிர்ந்துகொண்டால் நாங்கள் உங்களுக்கு நன்றியறிதல் உடையவர்களாக இருப்போம்.

வலைத்தளத்தின் மேல் இருக்கும் மொழி மாற்றியை (toggle) இப்போதே முயற்சிசெய்து ஏதாவது கருத்து இருந்தால் எங்களோடு பகிருங்கள்